Tamil Nadu | தமிழ் நாடு
அரசியல் பிரவேசத்தை பற்றி அதிரடி முடிவெடுத்த ரஜினிகாந்த்.. இது கழுவுற மீன்னுல நழுவுற மீன் கதையால இருக்கு!
சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சில காலம் கழித்து அரசியலில் குதிப்பது ஒன்றும் புதிதல்ல. அதில் சிலர் திறமையான அரசியல்வாதிகளாகவும் மாறியுள்ளனர்.
அந்தவகையில் தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதற்குப் பிறகு கட்சி தொடங்குவது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கத்தை அளித்தார் ரஜினிகாந்த். அதில் ‘தமிழ் மக்களிடம் அரசியல் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன்’ என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது கொரோனா பொது முடக்கம் தொடங்கிய பிறகு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தனது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினி தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் சில வதந்திகள் பரவின.
மேலும் இதைப்பற்றி ரஜினிகாந்த் ட்விட்டரில் அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்றும், ஆனால் அதில் வந்திருக்கும் அவரது உடல்நிலை பற்றிய தகவல்கள் உண்மை என்றும் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ‘என்னுடைய அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு எனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தெரிவிப்பேன்’ என கூறியிருந்தார் ரஜினி.
தற்போது சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் இறுதியில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், ‘எனது அரசியல் நிலைப்பாடு பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளாராம்.
எனவே, தற்போது நடைபெற்ற இந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் களத்தில் கருதப்படுகிறது.
