கமலுக்கு போன் போட்ட சூப்பர் ஸ்டார்.. விக்ரம் பார்த்து தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?

பல வருட காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நட்பாக பழகி வருகின்றனர். சினிமாவில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்வில் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்த இருவரும் நட்பாக உள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது.

கைதி, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்தது. இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. மேலும் இப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு நாடுகளுக்கு கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற திரைப் பிரபலங்கள் விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏகபோகம் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கிட்டத்தட்ட விக்ரம் படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதனால் விக்ரம் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் அலைமோதி வருவதால் கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் விக்ரம் படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் படத்தை திரையரங்கு சென்ற பார்த்துள்ளார். உடனே உலக நாயகனுக்கு போன் செய்த விக்ரம் படம் சூப்பர் என தனக்கே உரித்தான ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளரான மகேந்திரன் ஆகியோரை போனில் தொடர்பு கொண்ட ரஜினி பாராட்டியுள்ளார். ஒரு ரசிகனாகவும், நடிகனாகவும் ரஜினி விக்ரம் படத்தை பாராட்டியது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்