Rajinikanth: ‘ யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று கண்ணதாசன் சொல்வார். அதை தமிழ் சினிமா நடிகர்கள் புரிந்து கொண்டு நடந்தால் நன்றாகவே இருக்கும். பெரிய ஹீரோக்கள் என்ற இடத்திற்கு வந்த பிறகு என்ன பேசுகிறோம் என்பதை யோசித்து தான் பேச வேண்டும்.
அதிலும் சமீப காலமாக ரஜினி எது பேசினாலுமே சர்ச்சையாக தான் இருக்கிறது. ஒரு சாதாரண காமெடியாக ஆரம்பித்து ஒரு கட்சியிலேயே பெரிய குளறுபடி ஆகிவிட்டது ரஜினியின் பேச்சு. அதைத்தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியரை பற்றி ரஜினி பேசிய கமெண்ட் ஒன்று தற்போது பெரிய சர்ச்சையாகி வருகிறது.
சமீபத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினி மட்டும் இல்லாமல் படகுழுவை சேர்ந்தவர்கள் பேசிய விஷயங்கள் நிறைய ட்ரெண்டானது. எல்லாமே பாசிட்டிவாக இருக்க ரஜினி பேசிய ஒரு விஷயத்தை தற்போது சிலர் பூதாகரமாக ஆக்கியிருக்கிறார்கள்.
என்ன தலைவரே இதெல்லாம்!
அதாவது படத்தில் நடித்த பலரைப் பற்றி பேசிய ரஜினி நடிகை மஞ்சுவாரியரை பற்றியும் பேசி இருந்தார். அதில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடிகை மஞ்சுவாரியரை பார்த்தேன். வயதான கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால் வேட்டையின் சூட்டிங்கில் நேரில் பார்க்கும் பொழுது தான் சும்மா தள தள ன்னு இருந்தார் என்று சொல்லி இருக்கிறார். கதாநாயகியை பார்த்து இப்படி ஒரு கமெண்ட் அடித்திருக்கிறார், இதெல்லாம் சூப்பர் ஸ்டாருக்கு தேவையா என பலரும் தற்போது இதை சர்ச்சைக்குரிய கருத்தாக மாற்றி இருக்கிறார்கள்.
இதே போன்று தான் மீனா 40 நிகழ்ச்சிக்கு போயிருந்த ரஜினி மீனாவை பார்த்து அவர் சின்ன வயதில் சும்மா அமுல் பேபி மாதிரி இருப்பார் என பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் சில வருடங்களுக்கு முன் ரஜினி நான் ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்று பேசிய விஷயம் அப்போது பெரிய சர்ச்சையாகியது.
வசூல் வேட்டையாட தயாராகும் வேட்டையன்
- வேட்டையன் ஆடியோ வெளியீட்டுக்கு வரும் விஐபி
- இந்தவாட்டி தலைவர் ஆடு கதை சொல்வாரோ
- வேட்டையன் படத்தையும் விட்டு வைக்கல, சம்பவம் செய்த வசந்தி