ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினி டானாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இவர் இப்படத்தில் புரட்சியாளராக நடித்துள்ளாராம். மலேசியாவில் அடிமைகளாக்கப்படும் தமிழர்களுக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளாராம். இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.