ஓணம் கொண்டாடிய கூலி பட சேட்டன்கள்.. மாஸ் கட்டிய தலைவரின் வைரல் வீடியோ

Rajini : ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ரஜினியின் எனர்ஜி வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

அம்பானி வீடு திருமணத்தில் ரஜினி ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ஒரு புறம் ரஜினியின் டான்ஸை ரசித்தனர். இந்நிலையில் இன்றக ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி பட சூட்டிங்கில் அமர்க்களம் செய்திருக்கிறார் தலைவர். அந்த வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி முதல் முறையாக இணைந்திருக்கும் படம் தான் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் லோகேஷ் தாறுமாறாக இந்த படத்தை உருவாக்க இருக்கிறார்.

கூலி படப்பிடிப்பில் ஓணம் கொண்டாடிய ரஜினி

லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியுற்றது. அதை சரிகட்டும் அளவுக்கு தலைவருக்கு மாஸ் ஹிட் படத்தை கூலி படத்தின் மூலம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வேட்டி சட்டையில் பட குழுவினர் நடனமாடி இருக்கின்றனர்.

அதுவும் ரஜினியின் நடனத்தை பார்த்த பலரும் கைத்தட்டி மகிழ்ந்தனர். அதோடு தன்னுடன் ஆட லோகேஷை ரஜினி அழைத்த போது அவர் வர மறுத்து விட்டார். குதூகலமான இந்த வீடியோவை சன் நெட்வொர்க் வெளியிட்ட நிலையில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

பட்டையை கிளப்பும் தலைவர்

- Advertisement -spot_img

Trending News