இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, நெல்சன் திலீப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகரித்திருக்கிறது. இதுவரை ரிலீசுக்கு முன்பு படத்தை பார்த்த பலரும் ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் இது ஒரு சிறந்த படம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி ரொம்பவே பாசிட்டிவாக பேசியிருந்தார். ரஜினிக்கு இதற்கு முந்தைய இரண்டு மூன்று படங்கள் சரியாக போகாததால் இந்த படத்திற்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். மேலும் ரஜினியுடன் இந்த படத்தில் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் போன்ற மல்டிஸ்டார்களும் நடித்திருக்கிறார்கள்.

Also Read:அய்யய்யோ விட்டுட்டோமே என புலம்பும் ரஜினி.. மொத்த பெயரையும் தட்டி சென்று ஹீரோ!

ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நேரத்தில், இசை வெளியீட்டு விழா நடந்த பிறகு இன்னும் ஹைப் எகிறி இருக்கிறது. எப்போதுமே ஒரு படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமானால் அது பட குழுவுக்கு கொண்டாட்டம் ஆகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஜெயிலர் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இன்னும் படத்தை முழுமையாக பார்க்கவில்லையாம். டப்பிங் பேசியதோடு அவர் வேலையை முடித்துக் கொண்டாராம். அந்த நேரத்திலேயே அவருக்கு படத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் இந்த மனுவை அனுப்பி இருக்கிறார்கள்.

Also Read:ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

அந்த மனுவில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்யாமல், தமிழ்நாடு முழுக்க இருக்கும் அத்தனை தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற முடிவை எடுப்பது ரஜினியின் கையில் இல்லை. அவரே தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர் தான்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடியாகும். படத்தை எங்கே ரிலீஸ் செய்ய வேண்டும், எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுதான். அப்படி இருக்கும் போது இது போன்ற ஒரு மனுவை கொடுத்து ரஜினிக்கு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

Also Read:ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்