மாநாடு பார்த்துவிட்டு சுரேஷ் காமாட்சிக்கு போன் போட்ட ரஜினி.. என்ன கூறினார் தெரியுமா.?

maanaadu
maanaadu

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பதுபோல் தாமதமாக வெளியானாலும் சிம்புவின் மாநாடு படம் நாலா பக்கமும் பாராட்டுகளை குவித்து வருகிறது. யாரும் எதிர்பாராத அளவிற்கு முதல் முறையாக சிம்புவின் படம் இந்த அளவிற்கு பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இதை சிம்புவே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் டைம் லூப் அடிப்படையில் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று மாநாடு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளாராம்.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. நல்லது தேடி பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்சத்தில் சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி சார்” என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரே பாராட்டியுள்ளதால் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு சிம்புவின் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பழைய சிம்பு மீண்டும் வந்தது போல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இனி சிம்பு படங்கள் வெற்றி படங்களாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement Amazon Prime Banner