வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினிக்காக நெல்சன் கேட்ட நடிகை.. பட்ஜெட் தாங்காது என்ற சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னமும் தமிழ் சினிமாவில் சிங்கம் மாதிரி இருந்து வருகிறார். இவருடைய வயதில் சினிமாவை விட்டு காணாமல் போன நடிகர்களுக்கு மத்தியில் இன்னமும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் அடுத்ததாக நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு வீடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் படிப்படியாக நடக்கத் தொடங்கிவிட்டனர். எப்படியும் இந்த வருட தீபாவளிக்கு படத்தை கொண்டு வந்து விடலாம் என கணக்குப் போட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அந்த வகையில் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் யாரைப் போடலாம் என நெல்சன் குழப்பத்தில் இருக்க ரஜினியும் ஐஸ்வர்யா ராய் இடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கலாம் என கேட்டுள்ளாராம். ஏற்கனவே ரஜினி ஐஸ்வர்யாராய் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ரஜினியும் 40 வயதுக்கு கீழே உள்ள நடிகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அந்த வகையில் உலகம் முழுவதும் தெரிந்தவராக இருக்க வேண்டும் அதே சமயத்தில் தன்னுடன் ஜோடி போட்டால் வயது தெரியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஐஸ்வர்யாராயை பரிந்துரை செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொஞ்சம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. சில லட்சங்கள் இடையே நல்ல நல்ல நடிகைகள் இருக்கும் நிலையில் எதற்காக தேவையில்லாமல் ஐஸ்வர்யாராயை கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வந்தால் அவருடைய சம்பளம் மட்டுமே 10 கோடிக்கு மேல் தர வேண்டியிருக்கும். இதனால் தேவையில்லாமல் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும் என பலத்த யோசனையில் இருக்கிறதாம்.

ஆனால் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடித்தால் இன்னமும் படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறதாம். எப்படியும் ஹீரோ சொல்வதை தானே கேட்டாக வேண்டும். இதனால் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஐஸ்வர்யா ராயிடம் சம்பளம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சம்பளம் கட்டுபடியாகாது மட்டுமே ஐஸ்வர்யாராய் இல்லை என்றால் கிடையாது என்பதையும் ரஜினியிடம் தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்களாம்.

- Advertisement -

Trending News