Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீயாய் அரசியல் பணியில் இறங்கிய ரஜினி.. விழி பிதுங்கி நிற்கும் இயக்குனர்!
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன், பல ஆண்டுகளாக யாரும் எட்ட முடியாத உயரத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வருடத்திற்கு ஒரு முறை வெளிவரும் படத்திற்காக ரசிகர்கள் காத்திருப்பதோடு, அந்த படத்தை பூஜையும் செய்வர்.
தற்போது ரஜினியின் நடிப்பில், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘அண்ணாத்த’.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இந்தப் படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக உருவாக உள்ளதாகவும், தாய்மார்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
மேலும் அரசியல் கட்சி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் ஜனவரி மாதத்திலிருந்து ரஜினி தன்னுடைய அரசியல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

siruthai-siva-cinemapettai
தற்போது அரசியல் பணிகள் மும்மரமாக இருந்து வருவதால் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவிடம் ‘அண்ணாத்த’ படத்தின் வேலையை விரைந்து முடிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளாராம்.
எனவே, ரஜினிகாந்தின் அரசியல் அவதாரத்தைக் காண அவருடைய ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
