ரஜினி பிறந்தநாளுக்கு சன் பிக்சர்ஸ் தரும் ட்ரீட் இதுதான்.. அண்ணாத்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்திய சினிமாவின் பிரமாண்ட நட்சத்திரம் என்றால் அது நம்முடைய சூப்பர் ஸ்டார் தான். இவர் இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ரசிகர்களை வைத்துள்ளார். குறிப்பாக ஜப்பானில் இந்தியாவில் எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ, அதே போல் தான் அங்கேயும் வெறித்தனமான ரசிகர்கள் நம்முடைய சூப்பர்ஸ்டாருக்கு உள்ளனர்.

ஆனால் பல வருடமாக அமைதியாக இருந்த நம்முடைய சூப்பர் ஸ்டார், தற்போது சினிமாவில் எப்படி கொடி கட்டி பறந்தாரோ, அதேபோல் அரசியலும் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

அவ்வப்போது தன்னுடைய கட்சியைப் பற்றிய திட்டங்களையும் தனக்குத் தோன்றிய கருத்துகளையும் வெளிப்படையாக கூறி வருகிறார். தன்னுடைய அரசியல் திட்டங்களை எப்படி கூறுகிறாரோ அதேபோல் படத்தைப்பற்றி விவரங்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக திரையில் தோன்றிய படம் தர்பார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிக் கொடி நாட்டியது. அடுத்ததாக சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, சதீஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அடுத்ததாக டிசம்பர் 12ம் தேதி வரும் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு அவர் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

annaththa-title
annaththa-title

எது எப்படியோ, சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் நமக்கு அண்ணாத்த கொண்டாட்டம் தான். அடுத்த வருடம் அரசியல்வாதியாக பிறந்தநாள் கொண்டாட போகிறாரா, அல்லது நடிகராக கொண்டாடப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.