Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்.. கலக்கத்தில் தலைவர் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ரஜினி மட்டுமின்றி மீனா குஷ்பூ கீர்த்தி சுரேஷ் நயன்தாரா சூரி சதீஷ் போன்றவரும் நடித்து வருகிறார்கள். டி இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் கதை ஏற்கனவே தல அஜித்திடம் சொல்லப்பட்டதுதான் என தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித் இடம் இந்தக் கதையைச் சொன்னதாகவும், அதற்கு இந்த கதை வேண்டாம், வேறு பண்ணலாமென விஸ்வாசம் படத்தை செய்ததாகவும் சிறுத்தை சிவாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்தின் ரசிகர்கள் தற்போது கவலையில் உள்ளனர். ஏற்கனவே சோதனையில் உள்ள ரஜினிகாந்திற்கு நிராகரிக்கப்பட்ட கதையை சொல்லி சிறுத்தை சிவா களத்தில் இறங்கியுள்ளதால் ரசிகர்கள் தற்போதே பால்குடம் எடுத்து படம் வெற்றியடைய வேண்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகி விட்டார்களாம்.
இருந்தாலும் கிராமத்து படம் என்பதால் கொஞ்சம் மசாலா விஷயங்களை சேர்த்து சுறுசுறுப்பாக படத்தைக் கொடுத்தாலே வெற்றி கிடைத்துவிடும் என்ற பார்முலாவை தான் சுற்றி சுற்றி சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அது தலைவர் விஷயத்திலும் நடந்துவிட்டால் கவலை இல்லை.
தப்பித்தவறி சொதப்பினால் தர்பார் நிலைமைதான். இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தங்களுடைய விளம்பரத்தின் மூலம் ஓடாத படத்தை கூட ஓட வைத்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
உஷார் அண்ணாத்த!
