Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு உயிர் பயத்தை காட்டிய கொரோனா.. அலறியடித்து ஓடிவந்த அண்ணாத்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா,குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானதால் இப்படத்தை மிக விரைவாக முடிப்பதற்காக படக்குழு திட்டமிட்டு அதிரடியாக இரவு, பகல் பாராமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சிவாவுடன் முதல்முறையாக ரஜினிகாந்த் இணைந்து இருப்பதால். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் கொரோனாவால் சிறிது காலமாக திரைத்துறையில் யாரும் படப்பிடிப்பை நடத்தாமல் இருந்தனர். ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதையடுத்து மீண்டும் சினிமா துறையில் படப்பிடிப்பை தொடங்கினர்.

rajini-annaththe
தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பணியாற்றிய 8 பேருக்கு கொரானா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கொரானா டெஸ்ட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக ரஜினிகாந்தும் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
