Tamil Cinema News | சினிமா செய்திகள்
அண்ணாத்த படத்தில் இணைந்த விஜய் பட கொடூர வில்லன்.. ஆனா மனுசன பார்த்தாலே சிரிப்புதான் வருதப்பா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மீனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபகாலமாக ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை பற்றிய தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அப்படத்தின் அப்டேட்கள் வெளியாவதால் இப்படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக கால்பதித்து சமீப காலமாக வில்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜெகபதி பாபு. இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆனார்.

jagapathi babu
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
