fbpx
Connect with us

Cinemapettai

சிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்

rajini-sivakumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்

1977-ம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்த படத்தில் நடந்த சின்ன மாற்றம் அன்றைய ரஜினிகாந்த்தை இன்றைய சூப்பர் ஸ்டாராக வலம்வர வைத்தது.

70,80 காலகட்டங்களில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சிவகுமார். புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் கதை, பிளேபாய் மற்றும் அப்பாவி ஆகிய இருவருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டது.

இந்த கதையை முழுவதுமாக கேட்ட சிவகுமார், ரொமான்ஸ் காட்சிகள் இல்லாத நல்லவனாய் நடிப்பதை விட பிளேபாய் வேடத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் கதைப்படி பிளேபாய் வேடம் ரஜினிக்காக தான் எழுதப்பட்டிருந்தது.

சிவகுமாரின் உத்தரவுபடி முத்துராமன் அப்பொழுது புதிதாக உருவான ஹீரோவானா ரஜினிகாந்தை அப்பாவி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் அதன்பிறகு யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் நடித்த அப்பாவி கேரக்டர் அவரை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தியது. இதனால் தன்னுடைய மார்க்கெட் பறிபோனதே நினைத்து நண்பர்களிடம் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

அதேபோல் தற்போது சிவகுமாரின் மகன் கார்த்திக்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்க இருந்த கைதி படத்தின் கதை கார்த்தியிடம் வந்து தற்பொழுது வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதனால் நல்ல கதையை இழந்துவிட்டோம் என விஜய் சேதுபதி தன்னுடைய வட்டாரங்களில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top