17 வருடத்திற்குப் பின் நேருக்கு நேராக மோதும் ரஜினி, கமல்.. கொண்டாட காத்திருக்கும் சினிமா

25 வருடங்களுக்கு முன்பு கமல் ரஜினிக்கு இருந்த அதே போட்டி தற்போது உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமலும், மேலும் அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் தோல்வியடைந்து இருந்ததையடுத்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை அடைந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசனின் மார்க்கெட்டை ஏற்றி உள்ளது.

இதனிடையே தற்போது உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர், பா ரஞ்சித் உள்ளிட்டோரின் இயக்கத்தில் வரிசையாக படங்களில் நடிக்க தயாராகி வரும் நிலையில், தனது அடுத்த திரைப்படமாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார். மேலும் மலையாளத்தில் நடிகர் பகத் பாசிலின் நடிப்பில் வெளியான மாலிக் திரைப்படத்தையும் இவர் இயற்றி வெற்றி கொடுத்தவர். பலப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய இவர் முதல் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதனிடையே கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், நகைச்சுவை நடிகர் வடிவேலு இத்திரைப்படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் 2005ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு கமல்ஹாசன் படங்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. தற்போது கமலஹாசன் பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். தற்போது ரஜினிகாந்த் 169 திரைப்படமும் கமல்ஹாசன் புதிதாக நடிக்க உள்ள திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்த உள்ளனர் இவர்கள் இருவரும் ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் படமும் ஒரே நாளில் போட்டியாக வெளியாகும் என கூறி வருகின்றனர்.

தேவர் மகன் 2 படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தரும் நிலையில், தற்போது 2கே கிட்ஸ்களுக்கு ரஜினி கமலின் போட்டி சினிமா புது அனுபவத்தை கொடுத்துவருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்