Videos | வீடியோக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் குறும்படம்
சீனாவில் இருந்து வெளிவந்த கொரானா வைரஸ் தற்போது உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. பல சர்வதேச நாடுகளும் இந்த வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உலக நாடுகள் மருத்துவ ரீதியாக தோல்வி அடைந்துள்ளது என்பதை குறிக்கிறது.
இந்தியாவில் இதுவரை கொரானா வைரஸின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரானா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதே.
இருந்தாலும் அவ்வப்போது வெளிவரும் இளைஞர்களுக்காக கொரானா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் இணைந்து ஒரு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த குறும்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
