சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்நாளில் மிகப்பெரிய ஹிட்டடித்து, வசூல் சாதனைகள் படைத்து இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் செய்யாத ஒரு புதிய சாதனை பெற்ற படம்தான் ரஜினியின் சந்திரமுகி. ஒரு பேய் படமாக இந்த படத்தை எடுத்திருந்தாலும் லாஜிக் தவராமல், படத்தின் கதையை நகர்த்திச் சென்று இருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
காட்சிக்கு காட்சி பேயைக் காட்டி பயமுறுத்தி ஏண்டா இந்த படத்திற்கு வந்தோம் என்று நிமிடத்திற்கு நிமிடம், பயம் காட்டும் தற்போதைய பேய் படங்களை காட்டிலும் மிக நேர்த்தியாக கதையை தேர்வு செய்து அதில் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து வித்தியாசமான முறையில் படத்தை தயாரித்து கொடுத்து இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் வாசு. இந்த படத்தில் ரஜினி எப்படி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்த படத்திற்கு மிகப்பெரிய வலிமை சேர்த்து இருந்தாரோ, அதே போல இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகர் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ரஜினி மற்றும் வடிவேலு தோன்றும் காமெடி காட்சிகள்தான். அப்படி ஒரு காம்பினேஷன் தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத காம்பினேஷன் ஆக அமைந்து இருந்தது. இருவரும் இணைந்து நடித்து இருந்த பல காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இன்றுவரை அந்த காமெடி காட்சிகளில் இருந்துதான் மீம் கண்டெண்டுகள் எடுத்து வருகின்றனர். ஆனால் வடிவேலுக்கு தான் வாயால் தனக்கு வந்த வினை என்பது போல அதிகமாக வாய் பேசி சினிமாவில் இனி நடிக்கக்கூடாது என்று ரெட் கார்டு வாங்கி வீட்டில் முடங்கி போனார்.
அதன் பிறகு வெகு காலம் அவர் திரையில் வராமல் திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த சமயத்தில பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முளைத்துவிட்டனர். இருந்தாலும் எங்கப்பா வடிவேலு என்று கேட்கும் அளவிற்கு மிகப்பெரிய சாதனைகளை அந்த மனிதர் செய்துவிட்டு தான் போயிருக்கின்றார். அப்படி இருக்கையில் அவர் வெகு நாட்கள் கழித்து பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து விஷாலின் கத்திச்சண்டை படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு, பல படங்களில் கமிட்டாகி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் காமெடிக்கு என தனி ரூட்டை போட்டுக்கொடுத்த வடிவேலு ரஜினி காம்பினேஷனில் மற்றொரு படம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். ரஜினியும் பல படங்களை தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவரது படங்களில் வடிவேலு இணைந்து நடித்தால் சந்திரமுகியில் பார்த்த பல வெற்றி காட்சிகளைப் போல பல காட்சிகள் நமது தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினி புதிதாக நடித்து வரும் படத்தில் நிச்சயம் வடிவேலுக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமைந்தால் செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது. இனி வரும் படங்களில் அப்படி ஒரு வாய்ப்பு அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.