மட்டமாய் தோல்வியடைந்த ரஜினியின் 8 படங்கள்.. ஆச்சரியமளிக்கும் கேள்விப்படாத பட பெயர்கள்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிருபித்து காட்டியவர். இன்னமும் சொல்ல போனால் முதன் முதலில் ஜப்பானில் இந்திய படமோன்று 500 நாட்கள் ஓடியதெல்லாம் இவருக்கே சாத்தியம். இவ்வளவு உயரத்தில் இருக்கும் ரஜினியின் படங்கள் 1980களில் சில வாஷ் அவுட் ஆகியுள்ளன. அதுவும் முதல் நாளே சில படங்கள் தியேட்டரில் காத்து வாங்கியுள்ளது.

சங்கர் சலீம் சைமன் (1978) – பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த், லதா, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1977இல் ஹிந்தியில் வெளியான அமர் அக்பர் ஆண்டணி படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே எந்த சத்தமும் இன்றி தோல்வியை தழுவியது.

சதுரங்கம் (1978) – துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் விசுவின் கதையின் அடிப்படையில் உருவான இந்த படமும் அப்போது ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படங்களின் காட்சிகள் பெரும்பாலும் தொலைந்து போயுள்ளது.

வணக்கத்துக்குரிய காதலியே (1978) – ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீதேவி, ஜெயச்சித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படம் கமலின் சட்டம் என் கையில் படத்துடன் வெளியாகி காணாமல் போனது. இந்த படத்தில் தான் முதன் முதலில் ரஜினிக்கு இன்ட்ரோ சாங் இருந்தது.

இறைவன் கொடுத்த வரம் (1978) – ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த், விஜயகுமார், சுஜாதா, ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரே வருடத்தில் விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்களாக நடித்த 4 படங்கள் தொடர் தோல்வியினை சந்தித்திருந்தன.

குப்பத்து ராஜா (1979) – டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படம் 1972இல் வெளியான “டோ யார்” படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் அந்த வருட பொங்கலுக்கு கமலின் நீயா படத்துடன் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

நான் போட்ட சவால் (1980) – புரட்சிதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தான் முதல் முறை ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

காளி (1980) – ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது, தெலுங்கில் விஜயகுமாருக்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்கிறார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார். காளி பாக்ஸ் ஆபிஸ் தோல்வியடைந்தது மற்றும் சென்னையில் 56 நாட்கள் ஓடியது.

எல்லாம் உன் கைராசி (1980) – எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதுவும் தோல்வி படமே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்