கே ஜி எஃப் படத்தால் ரஜினிக்கு வந்த சிக்கல்.. இருந்தாலும் தலைவர் இப்படி பண்ணி இருக்க கூடாது

ரஜினிகாந்த் அவருடைய ஆரம்ப காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது என்னவோ நம் தமிழ் தான். சினிமாவில் நடிப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த அவர் இன்று தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

அதன் பிறகு அவர் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்ததன் மூலம் எனக்கு தமிழ் தான் முக்கியம் என்று பல மேடைகளில் கூறினார். ஆனாலும் அவர் ஒரு சில நேரங்களில் கர்நாடகாவை விட்டுக்கொடுக்காமல் பேசியதும் பலரும் அறிந்த விஷயம்தான்.

அதுமட்டுமில்லாமல் காவிரிப் பிரச்சனை மின் போது கூட முதலில் தமிழகத்தில் தான் ஆதரவு கொடுத்தார் ரஜினி காந்த் அதன்பிறகு அவரது படங்களுக்கு கர்நாடகா பெரிய அளவு எதிர்ப்பு கிளம்பியதால் உடனே தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். இதனை பலரும் ரஜினிகாந்த் நேரத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்கிறார் என அவரை மறைமுகமாக தாக்கிப் பேசி வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபிக்கும் வகையில் செய்த விஷயம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மொழியில் பார்த்து ரசித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் படக்குழுவினர் அனைவரையும் அவர் மனமாரப் பாராட்டி இருக்கிறார்.

இந்த தகவல் தான் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேஜிஎப் திரைப்படம் தமிழ் மொழியிலும் வெளியாகி இருக்கும் போது ரஜினிகாந்த் அந்த படத்தை ஏன் கன்னட மொழியில் பார்க்க வேண்டுமென்று பலரும் அவருக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அவர் பல மேடைகளில் தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். ஆனால் அது எல்லாம் சும்மா வாய் வார்த்தை மட்டும் தானா என்றும், பல சந்தர்ப்பங்களில் தான் ஒரு கன்னடர் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் என்றும் அவருக்கு எதிரான சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்