கௌரவ வேடம் என்று ஏமாற்றப்பட்ட ரஜினிகாந்த்.. தோல்வியால் சூப்பர் ஸ்டாரை கைகாட்டி எஸ்கேப் ஆன இயக்குனர்.

தமிழின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். சில விஷயங்களை மறைமுகமாகச் சொன்னாலும் அதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் ரசிகர் உட்பட அனைவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் ரஜினிகாந்த் சில நேரங்களில் வெளிப்படையாக பேசினாலும் பல நேரங்களில் மறைமுக தான் பேசியுள்ளார்.

சில படங்கள் தோல்வி அடைந்தால் அதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து, பின் வேறோரு கதையுடன் வருவார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக 2008ஆம் ஆண்டு குசேலன் படத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களை உள்ளன.

படம் வெளியாகி தோல்வி அடைந்த பின் அனைவரும் ரஜினியை சாடினார். ஆனால் அப்போது பதிலளித்த ரஜினி, குசேலன் படத்தின் பூஜை அன்றே நான் சொன்னேன். இந்த படத்தில் 25 சதவீதம்தான் என்னுடைய பங்கு என்று. அதன்பிறகு டைரக்டர் வாசு எனக்கு நிறைய சீன்கள் வைத்தார். கெளரவ வேடம் என்று சொன்னேனே.. இத்தனை சீன்கள் வைக்கிறீர்களே என்று கேட்டேன். சமாதானப்படுத்தினார்கள். கெளவுரவ வேடம் என்று வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

துவக்கத்தில், அந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்க முடிவு செய்யப்பட்டது. பிறகு தெலுங்கிலும் எடுக்க முடிவு செய்தார்கள். அந்த படத்தின் மலையாள உரிமையை கேட்டபோது, அதை ஏற்கனவே தயாரித்தவர், என்னையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொண்டால்தான் ‘ரைட்ஸ்’ தருவேன் என்றார். எல்லாம் செய்து முடித்து மலையாளத்திலும் டப்பிங்கிற்கு ஏற்பாடு செய்தார்கள்.

படம் 60 கோடி, 65 கோடி என்று விலை பேசப்பட்டது. அது வேண்டாம் என்று சொன்னேன். குறைந்த தொகைக்கு விற்று, குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணச் சொன்னேன். கேட்கவில்லை. இதுல என் தப்பு என்ன இருக்கு?

நான் தப்பு செய்தால், நானே ஒத்துக் கொள்வேன். நான் தப்பு செய்யவில்லை. அந்த படத்துக்காக எனக்கு கொடுக்கப்பட்டது, 25 கோடி அல்ல. நிச்சயமாக 25 கோடி அல்ல. தோல்வி பற்றிக் கேட்டீர்கள். ஒரு படத்துக்கு மறுபடியும் மறுபடியும் ரசிகர்கள் வந்தால்தான் அது வெற்றி பெறும். அந்த படத்துக்கு அவ்வளவுதான் தலைவிதி.

அந்த படத்தின் தோல்வியை தமிழில் நடித்த பசுபதி மீதும் தெலுங்கில் நடித்த ஜெகபதி பாபு மீதும் சுமத்தப்பட்டது. ரஜினி நடிக்கும் படங்கள் என்றால் அவருடைய முகம் தான் முன்னணியில் நின்று வியாபாரம் ஆகும். பின்னர் அவர் கேஸ்ட ரோல் என கூறி பழியை மற்றவர்கள் மீது சுமத்தினார்கள். அதே போல இந்த படத்தை தயாரித்த கவிதாலயாவும், விநியோகம் செய்த சன் நிறுவனமும் பெரிய விலைக்கு விற்று தவறு இழைத்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்