ரஜினி மறுத்ததால் அந்த இடத்தில் விஜய்யை வைத்த லோகேஷ்.. எப்படி பாத்தாலும் வெற்றிதான்

சினிமாவில் இயக்குனராகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு ஆசை எப்படியும் ரஜினியுடன் ஒரு படம் பணியாற்றிட வேண்டும் என்பதே இருக்கும். தற்போது பெரிய இயக்குனர்களை தவிர்த்து ரஜினி இளம் இயக்குனர்களுடன் இணைய முயற்சித்து வருவதால், தற்போதுள்ள இளம் இயக்குனர்களும் பலரும் அவரிடம் கதைக் கூறி வருகின்றனர்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இந்நிலையில் படத்தின் மேல் சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்த போதிலும் படம் வணிக ரீதியாக நல்ல வசூலை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, அண்ணனாக சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள நிலையில், அதற்குள் ரசிகர்கள் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து தளபதி 66 படம் முடிந்தவுடன் விஜய்யை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உண்மையில் மாஸ்டர் படத்தின் சூட்டிங்கின் போது ரஜினியை சந்தித்து அவருக்கு ஒரு கதை கூறியுள்ளார் லோகேஷ். அப்போது அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி, ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த கதையை வேண்டாமேன கூறியுள்ளார். பின்னர் லோகேஷும் விக்ரம் பட் வேலைகளில் பிஸியாக இருந்துள்ளார். விக்ரம் படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளதால் ரஜினிக்கு கூறிய கதையை ஒரு சில மாற்றங்களுடன் விஜய்க்கு கூறியுள்ளார்.

அவர் கூறிய கதை பிடித்து போகவே விஜயும் சம்மதித்துள்ளார். ரஜினிக்கு எழுதிய மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் கதையில் சில மாற்றங்களுடன் இப்போது விஜய் நடிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தளபதி 66 படம் சூட்டிங் முடிந்தவுடன் இந்த படத்தில் விஜய் இணையவுள்ளார். இந்த படம் உருவாகுவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தளபதி 67இல் கைதி பட இசையமைப்பாளரான சாம் சி.எஸ். இணைகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகார பூர்வமான செய்திகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Next Story

- Advertisement -