nadigar_sangam_rajiniதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடிகர், நடிகைகள் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்கள். போட்டியில் வெற்றி பெற்ற ‘சென்னை சிங்கம்ஸ்’ அணிக்கு கமல்ஹாசன் வெற்றிக் கோப்பையை வழங்கினார்.

இப்போட்டி நடைபெறும்போது நடிகை சுஹாசினி, ரஜினி மற்றும் கமல் இருவரையும் பேட்டி கண்டார். நடிகர் சங்க கட்டிடம் எப்படி இருக்க வேண்டும், இருவருக்கும் இடையேயான நட்பு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தார்கள்.

அப்பேட்டியில் ரஜினி, “நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும். என்னுடைய நட்புக்கு கமல்ஹாசன் தான் முன்னோடி.

நாங்கள் எல்லோரும் ரொம்ப நாள் ஆசைப்பட்ட மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் அமைய வேண்டும். பல்வேறு நடிகர்களுக்கு கனவுகள் இருக்கும். அதையெல்லாம் நிறைவேற்றும் விதமாக அக்கட்டிடம் இருக்க வேண்டும்.

அக்கட்டிடம் தொடர்பாக நாசர் பலரிடம் ஆலோசித்திருக்கிறார். இப்போது நடக்கும் பணிகள் ஒரு தொடக்கம் மட்டுமே. கமல் உள்ளிட்ட பலரும் யோசனைகளை சொல்லலாம். அதற்குப் பிறகு எல்லோரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பார்கள்” என்று பேசினார்.