Connect with us

Cinemapettai

2.O உலகளவில் வெளிவரும் தியேட்டர் எண்ணிக்கை.. மிரண்ட இந்திய சினிமா

rajinikanth shanker

Cinema News | சினிமா செய்திகள்

2.O உலகளவில் வெளிவரும் தியேட்டர் எண்ணிக்கை.. மிரண்ட இந்திய சினிமா

2.O உலகளவில் வெளிவரும் தியேட்டர் எண்ணிக்கை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் எந்திரன் 2.O. இந்த படத்திற்கான தியேட்டர் அளவை கேட்டால் தலை சுற்றுகிறது. ஆம் எந்திரன் 2.O திரைப்படம் உலக அளவில் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2.O இசை வெளியீட்டு விழா உலக மக்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பிரமாண்டமாக வெளியிட்டது லைக்கா நிறுவனம்.

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். இவர் ரஜினியை வைத்து இயக்கிய அனைத்து படங்களும் வசூல் சாதனை புரிந்துள்ளன. குறிப்பாக சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் வசூல் மழை கொட்டியது. அவர்தான் நூறு கோடியை தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்தினார். 2.O படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக அசத்தியுள்ளார். ரஜினிக்கு இணையான வேடம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 2.O படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், இந்தப் படம் முழுக்க முழுக்க 3D கேமராவால் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் வரும் vfx காட்சிகள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

லைக்காவின் இந்த பிரம்மாண்ட செலவு வேற எந்த திரைப்படத்திற்கும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத 10,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையை இப்படம் எடுத்துள்ளது. ஏற்கனவே 2.O ட்ரைலர் உலக சினிமாவுக்கே சவால் விடுவதாக இருந்தது.

2.o-trailer-rajini-trailers

2.o-trailer-rajini-trailers

ஆனால் இந்த அளவு திரை அரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே 800 கோடியை எடுக்க முடியும். ஏன் என்றால் படத்தின் தயாரிப்பு செலவே 600 கோடியை தொட்டுவிட்டது. அதுவும் பேட்ட படம் வெளிவருவதற்கு முன்பே 2.O படத்தில் பணத்தை எடுக்க வேண்டும் இல்லை என்றால் பேட்ட படம் அதில் பாதி வசூலை எடுத்து விடும்.

2.o-trailer-rajini-robtos

2.o-trailer-rajini-robtos

பாதிப்பு என்றால் படம் நல்லா இல்லை என்றால் மட்டுமே 2.O படத்திற்கு சிக்கல். ஏன் என்றால் தமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தாலும் இந்த படம் தியேட்டரில் பார்த்தல் மட்டுமே ரசிக்க முடியும். சவுண்ட், விசுவல்  காட்சிகளில்தான் மிகபெரிய பிரம்மாண்டத்தை காண்பித்து இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top