‘சூப்பர் ஸ்டார் ‘ ரஜினிகாந்த் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பாட்ஷா. இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம் இன்று வரையிலும் கமர்ஷியல் படங்களுக்கென ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்துள்ளது.

பாட்ஷா போல் இனி என்னால் ஒரு படத்தில் நடிக்க முடியாது என ரஜினியே பல பேட்டிகளில் கூறியுள்ளார். ரஜினி நடித்த படங்களில் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கே ஃபேவரைட் திரைப்படம் பாட்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜினி பிறந்தநாளில் வெளியாகவிருந்த இந்த பதிப்பு சில காரணங்களால் தாமதம் ஆனது. இந்நிலையில் பொங்கலில் இப்படம் திரைக்குவரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.