Tamil Nadu | தமிழ் நாடு
ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது.. பாரதிராஜா ஆவேசம்
சென்னை: ரஜினிகாந்த்தை தமிழகத்தை ஆள்வதை அனுமதிக்க முடியாது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரதிராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உங்கள் பூமியை ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார், கர்நாடகாவில் கன்னடர்தான் முதல்வர்.
அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது? பழைய மோசமான முன் உதாரணத்தை வைத்து, அவர் முதல்வரானார், இவர் ஏன் ஆகக்கூடாது என கேட்க கூடாது.
முன்பு தமிழர்கள் ஏதோ தெரியாமல் தூக்கி சுமந்தார்கள். முன்பு வெள்ளைக்கார்களின் ஆட்சி நடந்தது, இங்கே ஒரு வெள்ளைக்காரர் முதல்வரானால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? இவ்வாறு அவர் பேசினார்.
அதேநேரம், ரஜினிகாந்த் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்கிறீர்களே என்ற கேள்விக்கு, அவர் ஒரு நல்ல மனிதர். எளிமையின் உச்சம்,ரொம்ப அற்புதமானவர், நண்பர் அந்த அடிப்படையில் விழாக்களில் பங்கேற்கிறேன் என்று விளக்கம் அளித்தார்.
