Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய ரஜினி.. 2 முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார்

இரண்டு முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரஜினிகாந்த், கூப்பிட்டு விட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 48 வருடங்கள் ஆனாலும் இன்னமும் திரை துறையில் ஒரு ஹீரோவாகவே நடித்து வருகின்ற ஒரே ஸ்டார் இவராகத்தான் இருக்க முடியும். இவர் இந்த அளவிற்கு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருவதற்கு இவரது மனைவியும் ஒரு முக்கிய காரணம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள். பின்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அதற்காக அந்த காலத்தில் எந்த ஒரு செய்தியும் பத்திரிகையாளர்களின் மூலமாக மட்டுமே பொதுமக்களுக்கும்,ரசிகர்களுக்கும் தெரியவரும். அந்த வகையில் ரஜினி அவரின் கல்யாண தேதியை பத்திரிக்கையாளர்களிடம் கூறுவதற்காக அவர்களை வீட்டிற்கு அழைத்தார்.

Also read: ரஜினி, கமலே பார்த்து மிரண்டு போன நடிகர்.. பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர்கள்

அப்பொழுது அங்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு மாபெரும் விருந்து கொடுத்துள்ளார். விருந்து கொடுத்துவிட்டு எனக்கு திருப்பதியில் கல்யாணம் நடக்கப் போகிறது என்றும் அதற்கான தேதியையும் அறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷனும் போட்டிருக்கிறார். அதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதாவது ரஜினி, கல்யாணத்தைப் பற்றி கூறிவிட்டு நீங்கள் யாரும் கல்யாணத்திற்கு வரக்கூடாது என்று கூறி இருக்கிறார். இதை கேட்ட நிருபர் ஒருவர் நாங்கள் அப்படி கல்யாணத்திற்கு வந்தால் நீங்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டிருக்கிறார். இதனை கேட்ட ரஜினிகாந்த், கோபத்தின் வெளிப்பாடாக நீங்கள் அப்படி வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

Also read: ரஜினி, கமலையே ஓரம் கட்டிய ஹீரோ.. 90களில் பட்டையை கிளப்பிய வெள்ளி விழா நாயகன்

இதனை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் நீங்கள் எங்களை கூப்பிட்டு விட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். பின்பு ரஜினிகாந்த் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேசி திருப்பி அனுப்பி இருக்கிறார். இது முதன் முதலாக அவர் திருமண நேரத்தில் ஏற்பட்ட கோபம்.

அதன் பின் பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் இரண்டாவது முறையாக ரஜினி கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். அதாவது இந்த படம் தோல்வி அடைந்ததால் படத்தின் தயாரிப்பாளர்கள் ரஜினி இடம் சென்று நஷ்ட ஈடு கேட்டு டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் இரண்டாவது முறையாக கோபத்தை காட்டி இருக்கிறார்.

Also read: ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

Continue Reading
To Top