Connect with us
Cinemapettai

Cinemapettai

annaththe-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் ஜி, அவர் படத்தோட அண்ணாத்த படத்தை இறக்குங்க.. கட்டளையிட்ட ரஜினி

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் நம்பி இருக்கும் ஒரே தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அவர்கள் மட்டும்தான் அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரித்து வருகின்றனர்.

அதில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் மட்டும் மொத்தமாக முடிவடைந்தது. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளிக்கு முடிவு செய்திருந்தனர்.

ஆனால் தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் அடுத்த பொங்கலுக்கு தான் தியேட்டர்கள் பழைய நிலைமைக்கு வரும் என்பது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் தான்.

அதேபோல் தல அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்திருக்கும் வலிமை படமும் கடைசி கட்ட படப்பிடிப்புகளில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது. இந்நிலையில் வலிமை படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக முடியாத சூழ்நிலை.

தற்போது இரண்டு படமும் மீண்டும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக மோதிக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். ஏற்கனவே இதே போல்தான் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட நன்றாக இருந்ததாக கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் அஜீத்துடன் மோதி தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

annatthe-vs-valimai-on-pongal2022

annatthe-vs-valimai-on-pongal2022

Continue Reading
To Top