Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர் செல்வராகவன். ராஜராஜ சோழன் என்ற மாமன்னரின் வாழ்க்கை வரலாற்றை ஆயிரத்தில் ஒருவன் என்ற படமாக எடுத்தார்.
ஆனால் இவருக்கு ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. இவரது படங்கள் வெளியாகும்போது விமர்சனங்களை சந்தித்து, பின்னர் நீண்ட நாள் கழித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும்.
அப்படி ஒரு கொடுமை செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நடந்தது. படம் வெளியாகும்போது ஆயிரத்தெட்டு குறை சொன்னவர்கள் பல வருடங்கள் கழித்து படம் சூப்பர் என்று கூறியது செல்வராகவனுக்கு எப்படி ஒரு மன அழுத்தத்தை கொடுத்திருக்கும்.
இந்த படத்தில் நடித்த கார்த்தி மற்றும் பார்த்திபன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

rajini-in-aayirathil-oruvan-shooting-spot
அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதிய படைப்புகளுக்கு எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
