Tamil Cinema News | சினிமா செய்திகள்
அண்ணாத்த படத்தில் திடீர் மாற்றம்.. சன் பிக்சர்ஸ் மீது செம கடுப்பில் ரஜினிகாந்த்
தர்பார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்காலிகமாக இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் இடையில் 1008 மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரஜினிகாந்த் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தைப் போல் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாத்தை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க சிறுத்தை சிவாவுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சிறுத்தை சிவா முதலில் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் அனைத்தையும் முடிக்க உள்ள நிலையில் பிறகு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்தால் ரஜினி காட்சிகளை எடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிப்ரவரி மாதத்திற்குள் படத்தை முடித்து விட்டு சம்மர் ரிலீஸுக்கு படத்தை தியேட்டருக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம்.
ஏற்கனவே ரஜினி மருந்து கண்டு பிடித்தால்தான் நடிக்க வருவேன் என கூறிக் கொண்டிருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுத்துள்ளது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி எப்ப வருகிறாரோ அப்பவே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறியிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திடீரென படப்பிடிப்பு தொடங்கியது ரஜினிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
