சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக கபாலி படத்தை கொடுத்திருந்தார். 2.0 படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி தற்போது தனுஷ் தயாரிப்பில் இணையவுள்ளது.

இப்படத்தில் மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் ரஞ்சித் படமாக்கபோவதாக தகவல்கள் அண்மையில் வெளியானது.

இதனை தொடர்ந்து தாதாவின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் சித்தரிக்க வேண்டும் இல்லையெனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விட்டுள்ளார்.