petta-viswasam1
petta-viswasam

ஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி

விஸ்வாசம் படம் பொங்கல் அன்று வெளிவருகிறது. என்ன பிரச்சனைகள், எத்தனை போட்டிகள் வந்தாலும் விஸ்வாசம் வெளிவருவது உறுதி. ஆனால் படத்தை பற்றின எந்த ஒரு முக்கியமான அறிவிப்புகளும் வெளிவரவில்லை. பாடல்களும் வரவில்லை, டீஸர், டிரெய்லர் என எதுவும் வெளிவரவில்லை. மோஷன் போஸ்டர் மட்டுமே வெளிவந்து சாதனை புரிந்தது. பின்பு அஜித் நயன்தாரா படங்கள் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

ஆயிரம் இருந்தாலும் அஜித் என்ற ஒற்றை வரியில் அனைத்து ப்ரோமொஷன்களும் அடங்கும். 70 சதவீத தியேட்டர்களை வளைத்துவிட்டு ரஜினியுடன் அஜித் முதல்முறையாக மோதுகிறார். இவை அனைத்தும் அஜித் ரசிகர்களின் நம்பியே. ஏனென்றால் எதற்கும் கவலைப்படாத ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவில் மாஸ் காட்டுவார்கள்.

அதிகம் படித்தவை:  அடுத்த அஜித் ரெடி.. அஜித் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்

இப்பொழுது கூடுதலாக இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகப்பெரிய நிறுவனமான சன் நெட்வொர்க் வாங்கியுள்ளது. இனி பிரமோஷனுக்கு பஞ்சமே இருக்காது டிவியை ஆன் செய்தால் விஸ்வாசம் படத்தின் பற்றிய செய்திகள்தான் இனி வெளிவரும்.

petta-viswasam

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பேட்ட படத்தின் தயாரிப்பாளரும் சன்டிவி தான். ஆக இரண்டு படத்தின் பிரமோஷன்களும் பொங்கலில் பறக்கும் கல்லா கட்டும் இது உறுதி. கலாநிதி மாறன் வியாபாரத்தின் உச்சியில் இருப்பவர் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருவதால் பிரச்சினைகள் வரலாம் ஆனால் இரண்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டால் பிரச்சினைகளை குறைக்கலாம் அப்படிதான் திட்டம் போட்டு ரிலீஸ் செய்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  தல அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு.. வரலாற்று கதையாம்!

இப்பொழுது ரஜினி அஜித் படங்கள் வெளிவந்தாலும் முதல் ஷோவை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் பேட்ட படத்தின் ஒரு பாடலை வெளியிட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்து விட்டார் ரஜினி. மரண மாஸ் பாடல் பயங்கர மாஸாக இருந்தது. விஸ்வாசம் பார்த்துவிட்டு பேட்ட பார்க்கலாம் என நினைத்தவர்கள் இப்பொழுது பேட்ட பார்த்துவிட்டு விஸ்வாசம் பார்க்கலாம் என முடிவெடுத்து இருக்கின்றனர். ஆனாலும் அஜித் ரசிகர்கள் நிறைய பேர் ரஜினி ரசிகர்கள்தான். பில்லா படம் அஜித் நடித்ததில் இருந்தே ரஜினி ரசிகர்களையும் அஜித் அள்ளிவிட்டார். இரண்டு பேரும் வெற்றிபெற சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.