Connect with us

Cinemapettai

கமலை ஏன் அப்படி விமர்சனம் செய்கிறார்கள்.. கமல் குறித்து ரஜினி உருக்கம்

kamal-rajini

Tamil Nadu | தமிழ் நாடு

கமலை ஏன் அப்படி விமர்சனம் செய்கிறார்கள்.. கமல் குறித்து ரஜினி உருக்கம்

சென்னை: என்ன நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம், வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும் என்று ரஜினி காந்த் கூறினார்.

நேற்று சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘கமல் 60’ விழா எடுக்கப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழா நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த விழாவில் கமலை பாராட்டி ரஜினிக பேசுகையில் , கமல்ஹாசனை போல அறிவுஜீவியை சினிமா உலகில் நான் பார்த்தது இல்லை கமல் மக்களுக்கான கலைஞன். தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான திறமைசாலி.

நானும் கமலும் மிகவும் நெருக்கம். எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது. என்ன நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் . வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும். அரசியல், சித்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு எப்போதும் நீடித்திருக்கும்.

கமல் பேசுவது புரியவில்லையென சிலர் சொல்றாங்க. நான் அப்படி சொல்ல மாட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. கமல் பேசுவது நன்றாகவே புரியுது.

எனக்கு புரியும்போது மக்களுக்குப் புரியாமல் இருக்குமா? ஏன் அவரை அப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை . கமல்ஹாசனின் எதிர்கால பயணம் சிறப்பாக அமைய எப்போதும் என்னுடைய வாழ்த்துக்கள், என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top