Connect with us

Cinemapettai

நட்பின் இலக்கணமாக திகழும் ரஜினி, கமல்.. மேடையில் கலங்கிய தலைவர்

kamal-superstar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நட்பின் இலக்கணமாக திகழும் ரஜினி, கமல்.. மேடையில் கலங்கிய தலைவர்

முன்னணி நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்பவர்கள் ரஜினி மற்றும் கமல். என்னதான் ரசிகர்கள் ஆரம்பத்தில் அடித்துக்கொண்டலும் தற்போது அந்த மாதிரி எதுவும் செய்து கொள்ளவில்லை.

காரணம் இருவரின் நட்பும் அந்த அளவு ரசிகர்களின் மனதை மாற்றி விட்டது. போட்டி, பொறாமை இன்றி இருக்கும் இவர்களது நட்பு காலத்துக்கும் அழியாத காவியமாக திகழும்.

இந்நிலையில் கமல் 60 வருடம் சினிமாவில் சாதித்ததற்காக அவருக்கு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அவரது நண்பரான ரஜினி கலந்து கொண்டு அவரைப் பற்றி பேசி மேடையில் கண்கலங்கி உள்ளார்.

அவர் கூறியதாவது, எங்களின் நட்பை யாராலும் உடைக்க முடியாது. மேலும் நான் மிடில் கிளாஸ் பையனாக பிறந்ததால் கண்டக்டராக கஷ்டப்பட்டேன். ஆனால் கமல் வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் பார்பர் ஷாப், துணை ஆட்டக்காரர்கள் என தன்னுடைய வாழ்வில் படாத கஷ்டங்களே இல்லை என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

இவர்களின் நட்பு இப்படியே தொடர வாழ்த்துக்கள்.!

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top