fbpx
Connect with us

Cinemapettai

உயிர் ரசிகருக்காக ரஜினி செய்த பிரார்த்தனை.. தீயாக பரவும் ஆடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிர் ரசிகருக்காக ரஜினி செய்த பிரார்த்தனை.. தீயாக பரவும் ஆடியோ

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்றும் ரஜினியின் படங்களின் வசூல் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது.

எப்போதுமே அவரது ரசிகர்கள் அவருடன் எந்த சூழ்நிலையிலும் கூட இருக்கின்றனர். இதுதான் ஒரு சாமானிய மனிதனை சரித்திர நாயகனாக மாற்றியுள்ளது.

அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் ரஜினிகாந்த்.

அதிலிருந்து ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்புகள் கலந்துகொள்ள யோசித்துக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக அடுத்த சம்மருக்கு அண்ணாத்த படத்தை எதிர்பார்க்கலாம்.

இப்படியிருக்கையில் மருத்துவமனையில் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் உயிருக்கு போராடிய போது அவருக்கு போன் பண்ணி தைரியம் சொல்லியுள்ள ரஜினிகாந்தின் ஆடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

உச்சத்தில் இருக்கும் நடிகர் தன்னுடைய கடைக்கோடி ரசிகனுக்கும் போன் பண்ணி தைரியம் சொன்ன இந்த விஷயம் தான் ரஜினிகாந்தை இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வைத்துள்ளது.

Continue Reading
To Top