ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல்
கொடுத்து வருகிறார்கள்.

மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இன்று (ஜனவரி 20-ம் தேதி) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் மற்றும் மவுன போராட்டம் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர்கள் அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ், த்ரிஷா ஆகியோர் காலை முதலே பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.