“நெக்ஸ்ட் நீங்க CM ஆனா பெஸ்ட்” என்று ரஜினி படம் போட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில் யார் ஆட்சியை தொடருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நாளை நிரூபிக்க வேண்டுய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் திருப்பூர் மற்றும் மதுரை பகுதியில் ரஜினிகாந்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க அடுத்த முதலமைச்சரானால் பெஸ்ட்டாக இருக்கும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு இந்த போஸ்டாரானது ஒட்டப்பட்டுள்ளது. இம்மாதிரி அசாதாரண சூழலில் இப்படி போஸ்டர் ஒட்டியிருப்பது தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.