fbpx
Connect with us

Cinemapettai

நீங்க ஆரம்பிங்க கமல் நான் இருக்கேன் – ரஜினி சப்போர்ட்! இளைஞர் கட்சிக்கு தலைமை – பேச்சுவார்த்தை?

Rajni-Kamal_CinemaPettai

நீங்க ஆரம்பிங்க கமல் நான் இருக்கேன் – ரஜினி சப்போர்ட்! இளைஞர் கட்சிக்கு தலைமை – பேச்சுவார்த்தை?

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆனால், தனது பெயரில் கட்சி இல்லை. விவரம் சொல்கிறது அந்த புலனாய்வு வார இதழ்.  ஆச்சரியம், ரஜினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது ஜெ., கலைஞர் கருணாநிதி இருக்கும் வரை அரசியலுக்கு வரமாட்டேன் என்பதுதான்.

அதனாலேயே ரசிகர்களும் மக்களும் திட்டித் தீர்த்தாலும் கூட வாய் மூடி அமைதியாக  இருந்தார். கலைஞர் நினைவு தப்பி வீட்டில் படுக்கையில் இருக்கிறார். இனி அவர் அரசியலில் இல்லை என்பது போலத்தான். ஜெ.,வும் மரணம் அடைந்து விட்டார். ஆனால் ரஜினியின் உடல்நிலை தீவிர அரசியலுக்கு ஒத்து வராது.

அவரால் தமிழகம் முழுக்க அலைந்து திரியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் திரையுலகில் தனது நண்பரான கமலிடம் மனம் விட்டு பேசி இருக்கிறார். நான் எனது ரசிகர்களுக்கு எதாவது செய்து  விட்டுத்தான் போக வேண்டும். இல்லை என்றால் என் ஆன்மா சாந்தி பெறாது. அதே நேரம் எனது உடல்நிலை அவ்வளவு நலமாக இல்லை. நீங்கள் இறங்குங்கள் உங்கள் ரசிகர்கள், எனது ரசிகர்களை களம் இறக்குவோம்.

கூட இளைஞர்களை ஒன்று சேருங்கள் என்று கூற,கமல் ரொம்பவே தயங்கினார் என்கிறார்கள். ஜெ., இறந்து  ஒருமாதம் ஆன நிலையில் இந்த பேச்சு வார்த்தை நடந்துள்ளது. கமல் பதில் கூறாத நிலையில் மீண்டும் தொடர்பு கொண்ட ரஜினி, ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மாணவர்கள் தங்களை  உலகம் முழுக்க நிரூபித்து விட்டனர். இன்னும் தயங்காதீர்கள் என்று கூற, கமலோ ‘மாணவர்கள் அரசியல்வாதிகளோ சினிமா நடிகர்களோ வேண்டாம்’ என்கிற  உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளனர்.

நம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று கூற. இல்லை முயற்சியுங்கள் சமூக வலைத் தளங்களில் உங்கள் எண்ணங்களை பகிருங்கள் என்று கூறி இருக்கிறார். கமலும் ரஜினி கூற்றை ஏற்று டுவிட்டர்களில் பொளேர் பொளேர் என்று போட்டு தாக்க சு. சுவாமி சும்மா இருந்திருக்கலாம். அவர் தான் தமிழர்களை பொறுக்கி என்றும் கமலை ஆண்மை அற்றவர் என்றும வசை பாட பற்றிக் கொண்டது.

இப்போது கமலுக்கு மெல்ல மெல்ல மாணவர்களின் ஆதரவு பெருக ரஜினி செம குஷி ஆகிவிட்டார் என்கிறார்கள். கமலைத் தொடர்பு கொண்டு இதுதான் சான்ஸ் விடாதீர்கள். நாம் வெறும் நடிகர்களாக வாழ்கையை முடித்துக் கொள்ளகூடாது.

நம்மை நம்பிய ரசிகர்கள் முக்கியம் என மேலும் உசுப்பேத்தியுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட ரஜினி இளைஞர் கட்சியினர் யார் நம்மோடு இருக்கிறார்கள் என்று கேட்க, நிர்வாகிகள்  சுங்கி ராஜ்குமார் என்பவர் பற்றிக் கூறி இருக்கிறார்கள்.

சுங்கியைப் பிடித்து  இளைஞர் கட்சியின் ஆலோசகர் வெங்கட் ரமணாவிடம் பேசி கமலோடு பேச வைத்திருகிறார்கள். ரமணா தங்கள் நிலைப்பாட்டை கமலிடம் பேசினாராம்.  இது எந்த வகையிலும் நடிகர் சூழ்ந்த கட்சி ஆகிவிடக் கூடாது என்று தயங்கியபடி கூறி இருக்கிறார். பேச்சு வார்த்தை முதல் கட்டத்தில் இருக்கிறது என்கிறது  அந்த பத்திரிகை.

விரைவில் முடிவு ஏற்படும் அதுவரை கமல் டுவிட்டர் பக்கத்தை தனது போர்க்களமாக மாற்றி அரசியல் வாதிகளை ஒரு கை பார்ப்பார். அதன் பின் மே மாதம் தனது அரசியல் பயணத்தைத் துவங்குகிறார் கமல். ரஜினி கமலுக்கு பின புலமாக இருப்பார். ஜூன் அல்லது ஜூலை மாதம் கமல், ரஜினி கூட்டாக அரசியல் மேடை ஏறவும் பிளான் என்கிறார்கள்.

இந்த விஷயம் மட்டும் உண்மையாகி நிகழ்ந்தும்  விட்டால்.? தமிழகத்தின் புதிய அரசியல் பயணம் ஆரம்பிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அரசியல் விமர்சகர் ஞாநி இது குறித்து கூறுகையில் கமல் நல்ல சாய்ஸ் இளைஞர்களுக்கு என்ன தேவை? நாட்டுக்கு என்ன தேவை? என்பதை நன்கறிந்தவர் வரவேற்கலாம் என்று கூறி இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top