அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்தின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகின்றன.

கே.பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். தொடர்ந்து, பல வருடமாக நடித்து வரும் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் மன்னனாக இருந்து வருகிறார். ஒவ்வொரு படங்களிலும் அவரின் நடிப்பு மெறுகேறியதே தவிர சற்றும் குறையவில்லை. இன்னும் சொல்ல போனால் அவரின் வயதுக்கும் ஸ்டைலுக்கு சம்மந்தமே இல்லை என்பதை உயிருள்ள எடுத்துக்காட்டாக நிரூபித்து வருகிறார். இது சமீபத்தில் வெளியான கபாலி படத்திற்கும் பொருந்தும்.

இதை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான 2.ஓ படத்தையும், பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது படமான காலாவின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார். விரைவில், அப்படங்கள் திரைக்கும் வர இருக்கிறது. இதையடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், அவரின் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு உருவாக இருக்கும் படம் என்பதால் படத்தில் தீ பறக்க அரசியல் வசனங்கள் இடம் பெறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறதாம்.

அதிகம் படித்தவை:  சென்னையை அதிர வைத்த கபாலி - முழு வசூல் விவரம்

அரசியல் எப்போது என பல வருடமாக இருந்த கேள்விக்கு கடந்த வருட இறுதியில் அரசியலில் இறங்கி விட்டேன் என்ற வார்த்தைகள் மூலம் பதில் அளித்தார். அவருக்கு பிறகு அரசியல் நுழைவை அறிவித்த, உலகநாயகன் கமல்ஹாசனே புதிய கட்சியை அறிவித்து அதற்கு அடுத்த பணிகளில் பிஸியாகி விட்டார். ஆனால், ரஜினிகாந்த் தனது புதிய கட்சி குறித்த முடிவுகளை இன்னும் எடுக்காமலே இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ரஜினி-கமல் இணைந்து நடனமாடும் பாடல் ?
rajini

இதனை தொடர்ந்து, இமயமலைக்கு பல வருடம் கழித்து ஆன்மீக பயணம் சென்றவர். தற்போது, அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். தனக்கு இனி அரசியல், நடிப்பு என இரு துறைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் சாதாரண உடற்சிகிச்சை எனவே அவர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்தின் சில படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம், கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு எஸ்கலேட்டரில் இறங்குவது என பார்க்கும் போதே ஆக்‌ஷன் படத்தின் மாஸ் ஹீரோ எண்ட்ரி போல இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தான் இந்த வார இணையத்தின் ஹாட் டாப்பிக் எனக் கூறப்படுகிறது.