Tamil Nadu | தமிழ் நாடு
மக்கள் நலனுக்காக கமலுடன் இணைந்து பணியாற்றுவேன்.. ரஜினி பேட்டி
மக்கள் நலனுக்காக இணைய வேண்டிய சூழ்நிலை வந்தால் கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்.
என்னுடைய கருத்திற்கு ஒ.பி.எஸ்.கூறியது தனிப்பட்ட கருத்து. அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஒடிசாவில் டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பிய கமல் பேசுகையில், ரஜினியும் நானும் இணைவதில் அதிசயம் ஒன்னும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். அரசியலில் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். இப்பொழுது வேலை தான் முக்கியம். சேர்ந்து பயணிப்பது என்பது தமிழக மேம்பாட்டிற்காக பயணிக்க வேண்டியதாக இருந்தால் பயணிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் ரஜினி கமல் இருவரும் சேர்ந்து அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
