Tamil Cinema News | சினிமா செய்திகள்
அற்புதம் அற்புதம்-செம நடிப்பு- தூள் கிளப்பிட்டீங்க.! ராட்சசன் படக்குழுவை அதிர வைத்த மிகப் பெரிய ஸ்டார்.!
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியாகிய திரைப்படம் ராட்சசன், இந்த திரைப்படத்திற்கு முன் முண்டாசுபட்டி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டவர் தான் ராம்குமார், ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றது, இதனால் நல்ல வசூலும் ஆனது.

Raatchasan
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவையும் படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலையும் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
இதை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் ஆனால் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள் அற்புதம் அற்புதம், தூள் கிளப்பிட்டீங்க போலீஸ் உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது, வில்லன் யார்? இயக்குனரும் நீங்களும் மிக பொருத்தமாக இருப்பீர்கள் என விஷ்ணுவிஷால் பதிவிட்டுள்ளார் இதனால் விஷ்ணு விஷால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
When d one n only superstar @rajinikanth surprises u with a phone cal ,u jump in joy 🙂 #Ratsasan some of d words he used ‘FANTASATIC,FANTASTIC,FANTASTIC’ ‘Nadippu dhool kelapitingu’ ‘police unifrom le semma fit’ ‘villain yaaru? super body language’ ‘dir n unga combo super’
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) October 23, 2018
