rajini-sorry-to-actress-2-0
rajini

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

மேலும் இப்படத்தின் கதை ஏன், இப்படத்தில் யார்யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் கூட ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாயா என்கிற வளர்ந்துவரும் நடிகை இப்படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ” இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கே நானும் ரஜினி சாரும் இருக்கும் காட்சிதான். அந்த காட்சியை படமாக்க 4,5 டேக் போனது. உடனே ரஜினி சார் என்னிடம் மன்னிப்பு கேட்டார். எனக்கு ஒண்ணுமே புரியல. என்னடா, இவரு போய் என்கிட்ட மன்னிப்பு கேட்கிறாரேன்னு தோனுச்சு. ஆனால் எல்லோரும் சொன்ன அவரோட எளிமை குணம் உண்மைன்னு அப்போதான் புரிஞ்சுச்சு” என்றார்.