fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினியின் நிம்மதி போனதற்கு இதுதான் காரணம்.. 14 வருடங்களில் இத்தனை தோல்விகளா!

rajini-latest

Entertainment | பொழுதுபோக்கு

ரஜினியின் நிம்மதி போனதற்கு இதுதான் காரணம்.. 14 வருடங்களில் இத்தனை தோல்விகளா!

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக தாறுமாறாக பட்டையைக் கிளப்பினாலும் கடந்த 14 வருடங்களில் ரஜினிகாந்த் நடித்த 10 படங்களில் ஏழு படங்கள் படுதோல்வி அடைந்ததால் நிம்மதியைத் தொலைத்தவராக மாறி இருக்கிறார்.

குசேலன்: மலையாளத்தில் ஹிட் அடித்த படமான கதபறயும்போல் என்ற படத்தை, தமிழில் குசேலன் ஆக பி.வாசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அசோக்குமார் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகராகவே நடித்திருப்பார். என்னதான் மலையாளத்தில் இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும், தமிழில் சூப்பர் ஸ்டாரின் தோல்விப் படமாகவே பார்க்கப்படுகிறது.

கோச்சடையான்: சௌந்தர்யாவின் புது முயற்சியாக முப்பரிமாண படமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் முதலில் தமிழில் எடுக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இதிகாச படமாக உருவாகி இருந்த இந்தப் படத்தில் கோச்சடையான் ஆக முப்பரிமாண தோற்றத்தில் ரஜினிகாந்த் ஒரு பொம்மை போலவே தெரிந்தார். தனக்கென தனி ஸ்டைல், நடை, டயலாக் டெலிவரி போன்றவற்றின் மூலம் கவர்ந்த சூப்பர் ஸ்டாரை ஒரு பொம்மை போல் பார்த்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளுடைய வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க நினைத்த ரஜினிக்கு இந்த படம் படுதோல்வி படமாக மாறியது.

லிங்கா: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம், தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை தரும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படம் வெளியான போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ரஜினிகாந்த் நடிப்புக்கு ஏற்ற படம் இது அல்ல என ரசிகர்கள் கருதினார்கள். இதனால் இந்தப் படமும் அவரது தோல்வி பட லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

கபாலி: பா ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. தென்னிந்தியாவில் 2200 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உலக அளவில் அதிக வசூலான இந்தியத் திரைப்படங்களின் லிஸ்டில் இருந்தது. ஆனால் இதில் கபாலீஸ்வரன் ஆக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். ஏனென்றால் இவருடைய மற்ற படங்களை காட்டிலும் கபாலி படத்தில் அவருடைய பங்களிப்பு குறைவாக தெரிந்ததாக ரசிகர்கள் கருதினார்கள்.

காலா: பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் கபாலி படத்தை போன்றே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாகவே இருந்தது.

தர்பார்: ஏஆர்  முருகதாஸ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்து நடித்திருப்பார். இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினி தனது மிரட்டலான நடிப்பை வெளிக் காட்டினாலும் இந்தப்படமும் அவருடைய தோல்விப் படமாகவே அமைந்தது. கதையில் சுவாரசியம் இல்லாததால் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது.

அண்ணாத்த: ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு என திரை பட்டாளமே இணைந்து நடித்திருப்பார்கள். அண்ணன்-தங்கச்சி பாசக் கதைகளை பலவிதமாக பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் போரடித்தது.

இருப்பினும் சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்ற காரணத்தினாலேயே அவருக்காகவே, கதை எப்படி இருக்குது என்பதெல்லாம் பொருட்படுத்தாமல் ரசிகர்கள்  290 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் வாரி குவிக்க செய்தனர். இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி நடித்த படங்களிலேயே ரசிகர்களை கவராத படங்களில் டாப் இடத்தைப் பிடித்தது.

இவ்வாறு சமீபகாலமாகவே தொடர்ந்து படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்கும் தன்னுடைய 169-வது படமான ஜெயிலர் படத்தை ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக எடுக்க வேண்டும் என பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

Continue Reading
To Top