வெகு நாட்களாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகின்றனர், இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி தமிழகத்தின் தற்போதைய அரசு அமைப்பு குறித்து குற்றம் சாட்டிப் பேசினார்.

இக்கருத்துக்கு ஒரு சாராரிடத்தில் ஆதரவினையும், நாம் தமிழர் கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி,தமிழர் முன்னேற்ற படை உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்தும், பொதுமக்களிடத்தில் பரவலாகவும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிற சூழலில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது சமகால நடிகர் கமல்

““அரசியல் என்பது சேவை தொடர்புடையது. தமிழ் உணர்வுள்ள எவரும் தமிழகத்தை ஆளலாம். தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது. சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியிருப்பது தவறுமில்லை, வித்தியாசமான கருத்தும் இல்லை” என குறிப்பிட்டார்.