fbpx
Connect with us

ரஜினிக்கு தலைகுனிவா? நடந்து முடிந்த அந்த நிமிடங்கள்

Rajinikanth_Producers_Election

ரஜினிக்கு தலைகுனிவா? நடந்து முடிந்த அந்த நிமிடங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஜெயிச்சாச்சு. எதிர்த்துப் போராடிய தாணுவே, “தம்பி விஷால் ஒரு போராளி” என்று சர்டிபிகேட் கொடுத்தாச்சு. இனி வேலை மெனக்கெட்டு எதற்காக அந்த விஷயத்தை பிளாஷ்பேக் அடிக்கணும்? என்ற கேள்வி இந்த செய்தியை படிப்பவர்களுக்கு வரலாம்.

எதிர்ப்பாளர்கள் அனைவரும் “இந்த தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறோம்” என்று புல்ஸ்டாப் வைத்துவிட்டு ஒதுங்க நினைத்தாலும் உள் மனசு மட்டும் “விஷாலை நிம்மதியா வேலை செய்ய விடாதே…” என்று நிமிண்டிக் கொண்டேயிருக்குமல்லவா? அப்படியொரு நிமிண்டல் கோஷ்டி இந்த சங்கத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை திருட்டுத்தனமாக கைப்பற்றியதாம். ஓட்டுப் போட வந்தவர்கள் அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள்தானா? அல்லது வேறு ஏதும் கருப்பு ஆடுகள் உள்ளே நுழைத்து கள்ள ஓட்டு போட்டு விஷால் கோஷ்டியை வெற்றி பெற வைத்துவிட்டதா? என்று அறிந்து கொள்வதற்காக அந்த வீடியோவை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கவனித்தார்களாம். அப்போதுதான் ரஜினியின் என்ட்ரியையும் பார்க்க நேர்ந்திருக்கிறது.

இரு மருங்கிலும் கூடி நின்ற தயாரிப்பாளர்களும், வேட்பாளர்களும் ரஜினிக்கு விழுந்து விழுந்து மரியாதை செலுத்திய பின், வாக்களிக்கும் அறைக்குள் வந்த ரஜினியிடம் தேர்தல் அதிகாரி “உங்க ஐடி கார்டு கொடுங்க” என்று கேட்க, அப்போதுதான் நினைவு வந்தது போல ஷாக் ஆகியிருக்கிறார் ரஜினி. இல்ல… கொண்டு வரல… என்று அவர் கூற, கார்டு இல்லன்னா ஓட்டு போட அனுமதிக்க முடியாதே என்று தேர்தல் அதிகாரி தயங்க, மிக கொடூரமான சுச்சுவேஷன் ஆகியிருக்கிறது நிலைமை.

உலகமே அறிந்த ஒருவர். அவரே பல படங்களை தயாரித்திருக்கிறார் என்பது தேர்தல் அதிகாரிக்கு தெரியும். அப்படியிருந்தும் அடையாள அட்டை வேண்டும் என்று கேட்டதை ரஜினி எப்படி எடுத்துக் கொண்டாரோ தெரியாது. அங்கிருந்த அத்தனை பேரும் பதறியிருக்கிறார்கள். நல்லவேளை… சில நிமிஷங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்த தேர்தல் அதிகாரி, “சரி நீங்க ஓட்டுப் போட போகலாம்” என்று கூறிய பின்புதான் அத்தனை பேருக்கும் உயிரே வந்திருக்கிறது.

ஆனால் ரஜினியின் முகம் அதற்கப்புறம் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிஷங்கள் ஆகிவிட்டதாக ஆதாரம் காட்டியதாம் அந்த வீடியோ.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top