ரஜினிக்கு அரசியல் பிரச்சனை, விமர்சனத் தொல்லை இவைகள் போதாதென்று இப்போது புதிதாக ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது.

ரஜினிக்கு சொந்தமாக சென்னை ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி சங்கம் சார்பாக ஆஷ்ரம் என்னும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர். ராகவேந்திரா ஆஸ்ரம், வெங்கடேஸ்வரலு என்பவரின் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.

latha rajinikanthஇந்நிலையில் பள்ளியின் அங்கீகாரம் காலாவதியான பின்பும் அதனை புதிப்பிகாமல் பள்ளியை நடத்துவதாகவும், பல ஆண்டுகளாய் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வாடகை பாக்கி தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரலு வழக்கு தொடர்ந்து  பள்ளியை மூடி சீல் வைத்துவிட்டார்.

இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். மாணவர்கள் அனைவரும் வேளச்சேரியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.

மூடப்பட்டது உண்மை ஆனால் கடன் பாக்கி அல்ல  தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சும்மா வருவாளா சுகுமாரி சோக்கா சொன்னான்டா சோமாரி.