Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளம் இயக்குநர் ஒருவர் கூறிய பாட்ஷா பாணியிலான கதை நிராகத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினி திறமையான இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் மெட்ராஸ் இயக்குநர் பா.ரஞ்சித்துடன், கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை அவர் முடித்து விட்டார். கபாலி விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியகவும் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், காலா படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. மும்பையில் வாழும் தமிழர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தை, நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

அதேபோல், இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் தனது போர்ஷனையும் ரஜினி முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் அந்த படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் மௌனப்படமான மெர்க்குரி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தொடங்கியது. அதன்பின்னர் இமயமலை அடிவாரப் பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் படத்துக்குப் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது வெற்றிமாறன் ஆகிய இருவரில், ஒருவரின் படத்துக்கு ரஜினி ஓ.கே. செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங்கிற்கு ரஜினி கிளம்பும் முன், இயக்குநர் சாய் ரமணி அவரைச் சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். பாட்ஷா பாணியில் எழுதப்பட்ட அந்த கதையை முழுவதுமாகக் கேட்டு முடித்த ரஜினி, கதை நல்லா இருக்கு, ஆனால், இந்த வயசுக்கு மேல அதுமாதிரியான படங்களில் நடிப்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கூறி நிராகரித்து விட்டாராம். தீவிர ரஜினி ரசிகரான சாய் ரமணி, ராகவா லாரன்ஸ் நடித்திருந்த மொட்டசிவா கெட்டசிவா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top