பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தான் இன்று உலகமே பேசிக்கொண்டு இருக்கும் இயக்குனர். ஒரு இந்திய சினிமா இப்படியெல்லாம் இருக்குமா என்று பிரமிக்க வைத்த இயக்குனர்கள் இருவர். அதில் ஒருவர் நமது தமிழ் சினிமா இயக்குனர் ஷங்கர்.

அடுத்து தெலுங்கு சினிமா இயக்குனர் ராஜமௌலி.  தெலுங்கில் மிகப் பெரிய இடத்தில் தொடர்ந்து இருக்கும் ராஜமௌளிக்கு நீண்ட நாள் கனவு சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது.

ஆனால் இதுவரை அவரது கனவு நிறைவேறவே  இல்லை. பாகுபலி 2 ரிலீஸ் ஆனாதும் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் தனது டுவிட்டரில் இயக்குனர் ராஜமௌலியை கடவுளின் குழந்தை என்று புகழ்ந்தார்.

அதிகம் படித்தவை:  அடுத்த இடுப்பழகி சாயிஷாவின் குத்தாட்ட வீடியோ.! வீடியோவை பார்த்து ஷாக் ஆனா சக நடிகைகள்.!

நெகிழ்ந்து போனார் இயக்குனர். இந்த நிலையில் பாகுபலியை மிஞ்சும் வகையில் ஹாலிவுட் படமான ‘அவதார்’ தொழில் நுட்பத்தை மிஞ்சும் வகையில் ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த செய்தி கசிந்து வைரல் ஆகி விட்டது.

அதிகம் படித்தவை:  பேர் கேட்ட விஜய் மில்டனை காரி துப்பி அசிங்கப்படுத்திய கோலி சோடா சீதா !

ரஜினியும் இது குறித்து ஆலோசிப்பதாக செய்திகள் வருகிறது. அனேகமாக இது  ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக இருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவர் முழு ஓய்வு எடுக்கப்போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி, ராஜமௌலி இணைந்தால் அது உலக சினிமாக்களில் மாபெரும் சாதனை படைக்கும் என்கிறார்கள்.

வரலாம் வா வரலாம் வா..தலைவா..!