Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. செம வைரலாகும் புகைப்படம்
எங்கு திரும்பினாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் களமிறங்க இருப்பதுதான்.
ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து தற்போது அரசியல் பக்கம் தலை காட்டியுள்ளது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. மேலும் நீண்ட காலமாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தது நிறைவேறியுள்ள குஷியில் இருக்கின்றனர்.
டிசம்பர் 31ஆம் தேதி கட்சி பற்றிய அறிவிப்பும், ஜனவரியில் கட்சி பற்றிய முழு விபரங்களும் தெரிவிப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரங்களில் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ். சமீபகாலமாக பல திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். யூ டியூப் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் தற்போது சினிமாவிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பிஜிலி ரமேஷ் பிரபலமானதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா முத்திரையை ஒரு வித்தியாசமான செய்ததால் தான். அதுவும் போதையில் செய்வது போன்று ஒரு முறை ஒரு யூடியூப் சேனல் மூலம் பிரபலமானார்.
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் பிஜிலி ரமேஷ் செய்தது போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா முத்திரை செய்து காட்டியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது.

bijili-ramesh-pose-from-rajinikanth
