Politics | அரசியல்
சூப்பர் ஸ்டாரின் இமயமலை ரகசியம்.. களை கட்டப்போகும் அரசியல் அதிரடிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு படத்தை முடித்து திரைக்கு வரும்போது தான் இமயமலை செல்வார். இப்பொழுது படப்பிடிப்பு முடிந்து இமயமலை சென்று விட்டார்.
காரணம் ஒரு சில முக்கிய தலைவர்களை சந்திப்பு மற்றும் ஒரு சில சாமியார்களிடம் தன் அரசியல் முடிவு எப்படி இருக்கும் என ஒவ்வொன்றாக விசாரித்து சென்னை வர உள்ளார். ஒருசில தலைவர்களுக்கு கட்சியைப் பற்றியும் கொடியை பற்றியும் விரிவாக பேச உள்ளார்.
சந்திப்பு முடிந்ததும் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்ததும் அரசியல் கட்சி கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை முடிப்பதற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கி விடும். அதற்குள் கட்சி கொடி மாநாடு கூட்டம் என ஒரே பரபரப்பு தான்.
சூப்பர் ஸ்டார் அவர்கள் அரசியலில் ஜெயிப்பாரா? இப்பொழுது ஒன்றும் சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும். ரஜினி கட்சிக்கும், பொது கூட்டத்திற்கும் மற்றும் கூட்டணிக்கும் வரும் கட்சிகளையும் ஆட்களை வைத்து தான் முடிவெடுக்க முடியும்.
சினிமாவில் தனக்கு கிடைத்த ஸ்டார் அந்தஸ்தை அரசியலும் ரசிகர்களும் பொதுமக்களும் மீண்டும் தருவார்களா பார்ப்போம்.
