மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், படப்பிடிப்பு முடிந்த பின்னர் அரசியல் குறித்து ஆலோசிக்க தொடங்கிவிடுகிறாராம். சென்னையில் இருக்கும்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சமூக ஆர்வலர்களையும் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற்ற ரஜினிகாந்த், மும்பையில் இருந்து கொண்டு போன் மூலம் தனது அரசியல் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம்.

இப்போதைக்கு அவர் மனதில் இரண்டு எண்ண ஓட்டங்கள் உள்ளது. ஒன்று தமிழ்ப்படம் அல்லாத ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை ஒரு தமிழ்ப்படம் முறியடிக்க வேண்டும், அது ‘காலா’வாக இருக்க வேண்டும். இன்னொன்று ‘காலா’ ரிலீசுக்கு முன்பே கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது தானாம். இந்த முறை தீவிரமாக இறங்கிவிட்ட ரஜினியை யாராலும் தடுக்க முடியாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தனக்கு இருக்கும் ஒரே போட்டி மு.க.ஸ்டாலின் மட்டுமே என்பதை ரஜினி உணர்ந்துள்ளதாகவும், அவரை சமாளிக்க என்னென்ன திட்டங்கள் தீட்ட வேண்டும் என்பதே இப்போதைய ரஜினியின் சிந்தனையாக இருப்பதாக கூறப்படுகிறது.